கோவை, ஆக.20– ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப் படியான இஎஸ்ஐ, பிஎப், போனஸ் மற்றும் 8 மணிநேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனி யன் சிஐடியு சார்பில் பாரதிபார்க் சாலை யில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் எம்.ஆத்ம நாதன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை வலியுறுத்தி சம்மேளன தலைவர் எம்.பாலகுமார், பொதுச்செயலாளர் ஆர.சரவணன் மற்றும் பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் வாரிய மேலாண்மை இயக்குநர் உத்தரவுப்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு செட்யூல், ஆப் ரேட்படி ஊதியம் வங்கி மூலம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்ற மற்றும் இறந்தவர்களின் பணிக்கொடை, பென்சன் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். முடிவில் அன்பரசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.