tamilnadu

img

நாமக்கல் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

நாமக்கல், நவ.5- நாமக்கல் அருகே 6  வயது சிறுமி  டெங்கு காய்ச்ச லால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றி யம், பெரியமணலி கிராமம்  ஜேடர்பாளையம் சௌ டேஸ்வரி அம்மன் தெருவை  சேர்ந்த யுவராஜ் (38), மீனா (26) தம்பதி யினரின் மகள் நித்தியா(6).  அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சில தினங் களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு காரண மாக நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பின்னர் நாமக்கல் அரசு  தலைமை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இங்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மேல்சிகிச் சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு  தலைமைமருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டுபட்டு வந்தது. ஆனால், இங்கு  சிகிச்சை பலனின்றி சிறுமி நித்யா  பரிதாபமாக உயிரிழந்தார். இச்சிறுமியின்  உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.