கோவை, ஆக. 22 – நீதிமன்ற உத்தரவை மீறி பொது வெளியில் விநாயகர் சிலைகளை வைத்துள்ளோரைக் கண்டும், காணாமல் அலட்சியமாக உள்ள காவல்துறையின் அலட்சியத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வன் மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதா வது, கொரோனா பரவல் கார ணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வல மாக எடுத்துச் சென்று நீர்நிலைக ளில் கரைக்கவும் அரசு தடை விதித் துள்ளது. அதே சமயம் அவரவர் இல்லங்களில் வைத்து அமைதி யான முறையில் வழிபடுவதற்கு தமி ழக அரசு வழிகாட்டியுள்ளதோடு இதனை உயர்நீதிமன்றமும் உறு திப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவையில் சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி சுந்தராபுரம், ஆர். எஸ்.புரம், அன்னூர், இராமநாத புரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்த ரவை மீறியும், நீதிமன்றத்தை அவம திக்கும் வகையிலும் இந்து முன் னணி, விஷ்வ ஹிந்து பரிசத் உள் ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பொது இடங்களில், பிரதான சாலை களில் விநாயகர் சிலையை வைத் துள்ளனர். இது திட்டமிட்டு செய்யப் பட்டதாகவே கருதுகிறோம். பந்தல் அமைத்து, தோரணம் கட்டி சிலை கொண்டு வந்து வைக் கும் வரை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும், இத்தகையோரின் மிரட் டலுக்கு காவல்துறை அடிபணிந்து விட்டதோ என்கிற ஐயப்பாடும் எழு கிறது. நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டிய காவல் துறையே இவ்வாறு அலட்சியமாக இருப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் நான் பேசிய பிறகு ஓரிரு இடங்களில் மட்டும் சிலை யைப் பறிமுதல், வழக்கு என்கிற நடவடிக்கையை மேற்கொண்டுள் ளதாகத் தெரிய வருகிறது. இது நீதிமன்றத்தில் நாங்கள் கடமை யைச் செய்தோம் என ஏமாற்றுவ தற்கான நடவடிக்கையாயே ஆகும்.
இதனைத் தவிர்த்து பொது அமைதி கருதி உயர்நீதிமன்றம் கொடுத்த தடையை மீறி, மதப்ப தட்டத்தை உருவாக்கும் நோக்கத் தோடு செயல்படும் இத்தகைய அமைப்பினர் மீது காவல்துறை கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவையின் எதிர்கால அமைதி கருதி வேறு சீர் குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடு வதைத் தடுக்க பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத் மீது வழக்கு
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பலர் தங்களது வீடுகளிலும் தனியார் இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தடை உத்தரவை மீறி பொது இடங்களில் சிலை வைத்து வழிபட்டனர்.
இதனையடுத்து விநாயகர் சிலைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர். மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளைப் பறி முதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யும் நடவ டிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.