பொள்ளாச்சி, ஆக.19- காலாண்டு, அரையாண்டு தேர் வுகள் எழுதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தங்களது மகனின் தேர்ச்சி குறித்து அறிவிக்கப் படவில்லை என குற்றம்சாட்டி சம் பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வே.காளியாபுரத்தில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆனை மலை செல்வபுரத்தைச் சேர்ந்த சிவக் குமார், கற்பகம் ஆகியோரின் மகன் கடந்த (2019-20) கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள் ளார். இந்நிலையில், மாணவன் சரி யாகப் படிகவில்லை என ஆசிரியர் களால் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியால் மாணவனின் பெற் றோர் கடந்த பிப்.24 ஆம் தேதியன்று பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில், கொரோனா ஊர டங்கால் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தா னதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தங்களது மகன் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதியும், பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு எண் வெளிவந்த போதிலும், அவரது பெயர் தேர்வு முடி வில் வெளியாகவில்லை. இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் மிரட்டுவதாக குற்றம்சாட்டி மாண வனின் பெற்றோர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.