tamilnadu

img

ஊதியக் கோரிக்கைகளை நிறைவேற்று! சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் ஆட்சியரகத்தில் முற்றுகை

திருப்பூர், நவ. 25 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு ஊதியத்தை முறையாக கணக்கிட்டு வழங்க வலியுறுத்தி சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்று கையிட்டனர். ஏழாவது ஊதியக்குழு ஊதி யத்துடன், 2000ஆவது ஆண்டு மே 10ஆம் தேதிக்குப் பின் பணி யில் சேர்க்கப்பட்ட டேங்க் ஆப ரேட்டர்களுக்கு தொகுப்பூதிய ஊழியர்களாக முழு ஊதியம் வழங்க வேண்டும். 2013ல் சேர்க் கப்பட்ட தொகுப்பூதிய துப்புரவு ஊழியர்களை அரசாணைப்படி சிறப்புக் காலமுறை ஊழியர்க ளாக்க வேண்டும். தூய்மைக் காவலர்களை ஊராட்சி ஊழியர் களாக்கி ஊதிய உயர்வு தர வேண் டும். அரசாணை 2 (டி) 62ன்படி டேங்க் ஆப்ரேட்டருக்கு ரூ.11ஆயி ரத்து 236, துப்புரவு ஊழியருக்கு ரூ.9ஆயிரத்து 234 மாத ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற துப்புரவு ஊழியர்களுக்கு பணிக் கொடை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்கு வது போல் ஓய்வு பெறும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்க ளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி பெருந் திரள் முறையீடு செய்வதென சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தீர்மா னித்து இருந்தது. இதன்படி திங்களன்று காலை மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பெருந்திரளாக மாவட்ட ஆட்சியரகம் முன்பாக குவிந்தனர். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் உடுமலை ஈஸ்வரன், ஊத்துக் குளி முத்து மாணிக்கம், காங்கே யம் புண்ணியமூர்த்தி, திருப்பூர் சேகர், குடிமங்கலம் சின்னப்பன், மடத்துக்குளம் ராமசாமி, மூலனூர் பார்த்திபன், தாராபுரம் செல்வ ராஜ், பல்லடம் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் விஸ்வநாதன் உள் பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கள் உள்பட சுமார் 500 பேர் ஆட்சி யரகத்திற்குள் சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து நிர்வாகிகள் பேசினர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் களிடம் இது குறித்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க அதி காரிகள் உத்தரவிட்டனர்.