tamilnadu

img

இலவச மடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டு வழங்காமல் அலைக்கழிப்பு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை, ஜூன் 10– மடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு இதுவரை லேப்டாப் வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கதிரிமில்ஸ் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், ஒண்டிப் புதூர் அடுத்து காமாட்சிபுரம் பகுதி யில் அரசு உதவி பெறும் கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகி றது. இங்கு 2017-18-ம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் 193 மாணவர்கள் பயின்றோம். பள்ளிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை தங்களுக்குத் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் விலையில்லா மடிக்கணினி  வழங்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு சில மாணவிகளை மட்டும் அழைத்து சமீபத்தில் மறைந்த எம்எல்ஏ கனகராஜ் மூலமாக லேப்டாப் வழங்கியது போன்று போட்டோவை எடுத்துக்கொண்ட னர். பிறகு அதனையும் வாங்கிக் கொண்டனர். எங்களுக்காக வரவ ழைக்கப்பட்ட லேப்டாப்பை இது வரை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தரவில்லை.  தற்போது, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றோம். இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி யிடம் கேட்டோம். மடிக்கணினி வழங் குவதற்கான உத்தரவு இதுவரை பெறப்படவில்லை எனக் கூறுகின்ற னர். தற்போது, கல்லூரியில் பயி லும் மாணவர்களில் பலர் கம்ப்யூட் டர் சயின்ஸ், தொழில்நுட்ப பிரிவு ஆகிய பாடப்பிரிவில் பயின்று வருவ தால் மடிக்கணினி அவசியம் தேவைப் படுகிறது. மடிக்கணினி இல்லாத கார ணத்தால் பாடபுத்தகத்திற்கு தேவை யான தகவல்கள் பெற பிரவுஸிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான மாண வர்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் வழங்கி னால் தங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய  நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் கொடுத்த மனுவில் கூறியுள்ளனர். 

கல்வி உரிமை மறுப்பு 
கோவை வீரபாண்டி பிரிவு பகுதி யைச் சேர்ந்தவர் ஜெயா. கோவை மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது சகோதர ரின் மகனுடன் வந்த மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது சகோ தரர் கடந்த ஆண்டு உடல் நலக்குறை வால் இறந்து விட்டதால், அவரது இரு மகன்களையும் வளர்த்து வருகிறேன். இந்நிலையில், சகோதரனின் மூத்த மகனான ஆன்ரோசனை (4) கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சேர்த்தேன். அவர் எல்கேஜி வகுப்பில் தொடர பள்ளி நிர்வாகத்தினர் 30 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர்.  இலவசக் கல்வி என்று கூறிவிட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைக்காக ஏற்கனவே பணம் செலுத்திவிட்ட நிலையில், தற்போதுகல்வி கட்ட ணம் கேட்கின்றனர். இதனால், தனது சகோதரரின் மகன் ஆன்ரோசனை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உரு வாகி உள்ளது. எனவே கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

தவறான சிகிச்சை 
தவறான அறுவை சிகிச்சையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுத்துள்ளார்.  கோவை பாப்பநாய்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளி யாக பணியாற்றி வருகிறார். இவ ரது மனைவி புவனேஸ்வரி. இவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசிய னாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பை மற்றும் ஹெரி னியா பிரச்சனை காரணமாக அவர் பணிபுரியும் மருத்துவனை மருத்துவ ராக இருந்து தனியாக கிளினிக் நடத்தி வரும் சந்திரகலாவிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து அறுவை சிகிச்சை மேற் கொண்டதாக புவனேஸ்வரி தெரிவித் தார். இருப்பினும், சிகிச்சைக்குப் பின் வயிற்றில் தீராத வலியால் அவதிப் பட்டு வந்துள்ளார்.  தற்போது மருத்துவர் சந்திர கலா புலியகுளம் பகுதியில் ஜெனி சியஸ் என்கிற மருத்துவமனை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவரி டம் தெரிவித்த போது மருந்துகள் கொடுத்து அனுப்பி விட்டதாகவும், ஆனால், வலி குறையாத காரணத்தால் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச் சைக்குச் சென்ற போது அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் பஞ்சு இருந்ததால் மலக்குட லில் சீழ் பிடித்து ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக் காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்குப் பரிந்துரை செய்து உள்ள னர். இதனைத் தொடர்ந்து, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். தற்போது உடல் நிலை மோசமாகித் தான் பாதிக்கப் பட்டு உள்ளதாகக் கூறிய புவனேஷ் வரி, இது தொடர்பாக மருத்துவர் சந்திரலேகாவிடம் கூறிய போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாகக் குற்றம் சாட்டி னார். அறுவை சிகிச்சையின் காரண மாக வேலைக்கு செல்ல முடியாத கார ணத்தால் கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வீடு வாடகை, மகனின் கல்வி செலவுகளை சமாளிக்க முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை யில், தவறான அறுவை சிகிச்சை யால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மருத்துவர் சந்திர லேகா மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி மனு அளித்துள்ளார்