tamilnadu

கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு நிர்பந்தம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை, மார்ச் 9 -  பள்ளிக் கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய நிர்பந்திப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டு மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்து வந்துள் ளார். இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் புகார் அளித்தும் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  இதேபோல்,  நரசிம்மநாய்க்கன் பாளையம், புதுப் பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் சம்பவம்  தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் மனு அளித்து இருந்தார். ஆனால், வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளாமல், கண்துடைப்பாக துறை ரீதியான நடவடிக்கை  மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்த பள்ளிகளின்  ஆசிரி யர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று திராவிடர் விடுதலை கழகத்தினர்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.