tamilnadu

img

இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களியுங்கள்

கோவை, ஏப்.7- தமிழகத்திற்கும், கோவைக்கும் மத்திய அரசு வஞ்சகம் இழைத்துள்ளது. ஆகவே, இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேடுக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் ஞாயிறன்று கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கோவை பெரியநாயக்கன் பாளையம் பேருந்து நிலையம் முன்பிருந்து துவங்கிய பயணம் எல்எம்டபுள்யூ பிரிவு, யூனியன் டேங்க், ஜோதிபுரம், வீரபாண்டிபிரிவு, நரசிம்மநாயக்கன்பாளையம், ஜோதிகாலணி, ராக்கிபாளையம், வடமதுரை, தொம்பம்பட்டி மற்றும் அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார பயணத்தில் திமுக மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய பொறுப்பு செயலாளர் அறிவரசு, பத்மாலயா சீனிவாசன், விஷ்னு பிரகாஷ், பையாக்கவுண்டர், சிபிஐ மாவட்டதுணை செயலாளர் சிவசாமி, ஞானமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.சி.நடராஜ், நகர தலைவர் கோவிந்தராஜ், மதிமுகஒன்றிய செயலாளர் முத்துசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, யு.கே.வெள்ளிங்கிரி, என்.அமிர்தம், பாலமூர்த்தி, கேசவமணி, சிவராஜ், தேவராஜ் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி,இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்று வாக்கு சேகரித்தனர். 


முன்னதாக, இந்த பிரச்சார பயணத்தில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும்எனது பணிகளை அங்கீகரித்துவாக்களியுங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களால்தான் இதுபோன்று வாக்குகளை கேட்க முடியும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு எதிராக களத்தில் இருப்பவரும் நாடாளுமன்றஉறுப்பினராக இருந்தவர்தான். அவர் செய்த ஒரு திட்டத்தைக்கூட சொல்ல முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு விசுவசமான ஊழியனாக மக்கள் பிரதிநிதி இருக்க வேண்டும்.


அத்தகைய மக்கள் பிரநிதியாக நான் இருந்தேன் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய் நிதியினை முழுமையாக மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்துள்ளேன். அது பெயர்ந்துபோகும் சாலைகளாக இல்லாமல், எழுந்து நிற்கும்கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளதே சாட்சி. ஏழை, எளிய மக்கள்பயன்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூககூடங்கள், குடிநீர் தொட்டி, நூலகம், ரேசன்கடை, அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் ஆகியவற்றிற்கான நவீன உபகரணங்கள் ஆகியவைகள் பத்தாண்டு கழிந்தபின்னும் என்னுடைய பணியை நினைவு கூறும் சாட்சிகளாக உள்ளது. இதேபோல் புதிய ரயில்கள், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவகல்லூரி உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தந்துள்ளேன். மேலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களாய் இருக்கிற அரசு அச்சகம், கரும்பு ஆராய்ச்சி நிலையம், பருத்தி ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், அங்குள்ள தொழிலாளர்களின் ஊதியம், உரிமை உள்ளிட்ட வாழ்வியல் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு அதனை நிறைவேற்றியுள்ளேன். ஆனால், இந்த கடந்த ஐந்தாண்டு மோடியின் ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் அழிந்தது மட்டுமல்லாமல், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை இடமாற்றம் செய்தும், மூடுவிழா நடத்தியும் தமிழகத்திற்கும், கோவைக்கும் மத்திய அரசு வஞ்சகம் இழைத்துள்ளது. இந்நிலையில் நான்மீண்டும் உங்கள் ஆதரவோடுநாடாளுமன்ற உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டால் இழந்தஉரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களில் அர்ப்பணிப்பு மிக்கபணியை மேற்கொள்வேன் என்கிற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.