tamilnadu

img

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

சேலம், ஜூலை 10- சேலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 13 விவ சாயிகளை காவல்துறை யினர் அராஜகமாக கைது செய்தனர்.  விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கருத்து களை கேட்டு ஒப்புதல் வழங் கிய பின்புதான் பணி களை அதிகாரிகள் மேற் கொள்ள வேண்டும். ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் விளைநிலங் களில் உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்க விவசாய நிலங்களில் அதி காரிகள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக அராஜக செயலில் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், சங்ககிரி, சின்ன கவுண்டனூர் அருகிலுள்ள கலியனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் தோட்டத்தில் அவரின் அனுமதி பெறா மல் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க அதிகாரி கள் அளவீடு செய்தனர். இதனை கண்டித்த விவசாயி கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெரு மாள், சேலம் மாவட்ட செய லாளர் எ.ராமமூர்த்தி, ராஜேந்திரன், பழனிசாமி உள்ளிட்ட விவசாய சங்க  நிர்வாகிகளை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.