tamilnadu

img

மின்கோபுரம் அமைக்க நில அளவீட்டு பணிக்காக கைக்குழந்தையுடன் பெண் உள்பட விவசாயிகள் பலவந்தமாக கைது

திருப்பூர், ஆக. 22 – உயர் மின் கோபுரம் அமைப்ப தற்காக நில அளவீட்டுக்கு வந்த வருவாய் துறை மற்றும் பவர்கிரிட் அமைப்பினருடன் கிராமத்து விவ சாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்தனர். ஆனால் காவல் துறையினர் பலவந்தமாக கைக்குழந்தையுடன் இருந்த பெண் உள்பட விவசாயிகளைக் கைது செய்தனர்.  பல்லடம் சாலையூர், காளியப் பன் கவுண்டன் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவீட்டு பணிக்கு வியாழனன்று வருவாய் துறையி னர், பவர்கிரீட் நிறுவனத்தினர் வந்தனர். அவர்களிடம் விவசாயி கள் அளவீடு செய்யக் கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கு காவல் துறையினர் குவிக் கப்பட்டனர். அவர்கள் விவசாய நிலங்களில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளை குண் டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர். இதற்கிடையே விவசாயிகளுக் கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட் டது. மேலும் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ணிடம் காவல் துறையினர் கடு மையாக நடந்து கொண்டது அங்கி ருந்தோருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.  இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறுகையில், உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சாலை யூர், காளியப்பக் கவுண்டன் புதூரி லும் எதிர்ப்புத் தெரிவித்த பெண் கள் உட்பட விவசாயிகளை காவல் துறையினர் பலவந்தமாகக் கைது செய்துள்ளனர். அவர்களை வாக னத்தில் ஏற்றி ஊர் ஊராகச் சுற்றி, அலைக்கழித்துள்ளனர். கடைசி யில், புத்தரச்சல் மண்டபத்தில் அவர்களை வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உயர்மின் கோபுர எதிர்ப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பார்த்த சாரதி கூறுகையில், உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக கேபிள் வழியாக இத்திட்டத்தை செயல் படுத்தக் கோரி,விவசாய நிலத்தை பாதுகாக்க போராடிய பெண் விவ சாயிகளை காவல்துறை கைது செய்துஅலைக்கழித்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.