திருப்பூர், ஜூலை 9 – தமிழக மின்வாரியத்தின் மூலம் அமைக்கப்படும் உயர் மின் கோபுரம், கம்பி வழித்தடத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக்கோரி திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளை யத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் மின் வாரியத்தின் மூலம் அரசூர் - ஈங்கூர் 230 கே.வி. மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இத் திட்டத்தால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயி கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த மின் தடத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டுமென கடந்த நான்கு ஆண்டு களாக விவசாயிகள் போராடி வந்தனர். மேலும், மின்கோபுர வழித்தடம் செல் லும் நிலங்களுக்கு கோவை மாவட் டத்தில் ஒரு இழப்பீடும், திருப்பூர் மாவட் டத்தில் ஒரு இழப்பீடும் பாரபட்சமாகக் கணக்கிடப்படுகிறது. ஆகவே, அமைப் கப்பட்டு வரும் மின் கோபுரங்களுக்கும், கம்பி செல்லும் பாதைக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக்கோரியும், நிலத்திற்கான இழப்பீடு நிர்ணயிக்க கோவை மாவட்ட ஆட்சியர் பின்பற் றிய வழிமுறையான கிராமத்தின் உயர்ந்தபட்ச வழிகாட்டு மதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண் டும் என விவசாயிகள் கோரி வருகின்ற னர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வியாழனன்று பொங்குபாளையம் கிராமத்தில், பாதிக்கப்பட்ட விவசாயி பாலு என்பவர் தோட்டத்தில் விவசா யிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இப்போராட்டத்திற்கு விளைநிலங் களில் உயர் மின்கோபுரங்களுக்கு எதி ரான விவசாய சங்கங்களின் கூட்டி யிக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து என்கிற வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பொங்குபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.ஜெயக்குமார், தமிழக விவசாயிகள் சங்க பாதுகாப்புச் சங்க மாநிலத் தலை வர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் மற்றும் நிர்வாகிகள் கே.ரங்க சாமி, எஸ்.அப்புசாமி, ஆறுமுகம், எஸ்.வெங்கடாசலம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கை நிறைவேறும் வரை தங்க ளது நிலத்தில் மின்வாரியத்தினர் வேலை செய்ய அனுமதிப்பதில்லை என விவ சாயிகள் உறுதியேற்றனர்.