தாராபுரம், மார்ச் 13 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சத்துணவு திட்டத்தை தனி யாருக்குத் தாரைவார்க்கக் கூடாது. இஸ்கான் நிறுவனத்திடம் சத்துணவு திட்டத்தை ஒப்படைத் ததை உடனே திரும்பப்பெற வேண்டும். சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், பணியாளர் இறந்ததற்கு பின்னும் குடும்பத் தினருக்கு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழிய ருக்கு முறைப்படி ரூ.7 ஆயிரத்து 750 ஓய்வூதியம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆண்ட்ரூஸ் லிவிங்ஸ்டன் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரி பேசினார். ஓய்வுபெற்ற சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால்ராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ஞான புஷ்பம் நன்றி தெரிவித்தார். அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.விஜய லட்சுமி, வி.சுமதி, ஆர்.கருப்பன், ஆர்.ராமன், ஆர்.நாகராஜன், ஏ.மீனாகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.