tamilnadu

முழு ஊரடங்கு காலத்திலும் பணிக்கு வரச்சொல்லி நிர்பந்தம் தனியார் நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகார்

கோவை, ஜூலை 11– முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்ப டும் நாட்களிலும் கட்டாயம் பணிக்கு வரச் சொல்லி மிரட்டும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.  கோவை மதுக்கரை திருமலையம்பா ளையத்தில் எவரெஸ்ட் இன்டஸ்ட்ரியல்ஸ் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சிமெண்ட் சீட் உற்பத்தி செய் யும் இந்நிறுவனத்தில் 300க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலை யில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழி லாளர்கள் முழு ஊரடங்கு காலத்திலும் கட் டாயம் வேலைக்கு வரவேண்டும் என தொடர்ந்து நிர்பந்தப்படுத்துகின்றனர். கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று முழு ஊர டங்கு நாளில் 50க்கும் மேற்பட்ட தொழி லாளர்களை எவரெஸ்ட் நிறுவனம் முழுநேர பணியில் ஈடுபடுத்தியது. தற்போது ஜூலை 12 ஆம் தேதியன்றும் பணிக்கு வரச்சொல்லி நிர்பந்தம் செய்கின்றனர்.  போக்குவரத்து  உள்ளிட்ட எவ்வித வசதி யும் இல்லாத இந்நேரத்தில் தொழிலாளர் களை பணிக்கு வரச்சொல்வதும், வர இய லாத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என நிர்வாகத்தின் மிரட்டும் போக்கும் தொடர்கிறது. ஆகவே, இந்நிறுவ னத்தில் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்நிறு வன தொழிலாளர்கள் சனியன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.