tamilnadu

img

சம்பள பிடித்தம் செய்யாதே - முழு ஊதியம் வழங்கு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 24 - அரசு அளித்துள்ள விடுமு றைக்கு சம்பளம் பிடிப்பதை கண் டித்தும், முழுச்சம்பளம் வழங்க  வலியுறுத்தியும் அரசு போக்குவ ரத்து ஊழியர்கள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த  மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டு வருகிறது. இந்த  ஊரடங்கு காலத்தில் அரசு போக் குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் ஊதிய பிடித்தம் செய்ய போக்குவரத்து கழக நிர்வாகம் முனைகிறது.  குறிப்பாக, அரசு அறிவித்து ஊர டங்கு காலத்தின் ஒருபகுதியை ஊழியர்களின் சொந்த விடுப்பு என பதிவு செய்து சம்பள பட்டி யல் தயாரித்துள்ளது. இதனைக்  கண்டித்து தலைநகர் சென்னை யில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உண்ணாவி ரதப் போராட்டத்தை மேற்கொண் டுள்ளனர்.  இப்போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்து, கோவையில் அனைத்து பனிமனைகள் முன்பும்  தொழிற்சங்க கூட்டமைப்பு சார் பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை சுங்கம் பகுதி பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அரசு  போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் வேளாங் கண்ணிராஜ் தலைமை தாங்கி னர். இதில்  தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம் எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப்  உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க ஊழியர்கள் பலர் பங்கேற் றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக பனிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு துணை பொது செயலாளர் கணேசன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்  ரமேஷ், இஸ்மாயில், ஏஐடியுசி பொதுச்செயலாளர் முகமது இப்ரா ஹிம், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.