tamilnadu

அபாயகரமான கட்டிடங்களை அப்புறப்பத்திட வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை, செப். 11- கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள, நீண்ட காலமாக உபயோகமில்லாமல் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள கட்டடங்கள் மற்றும் நீண்ட காலமாக உபயோகமில்லாமல் பாதிப்பினை   ஏற்படுத்தக்கூடிய அரசு மற்றும் தனியார் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஆங்காங்கே சில கட்டடங்கள் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அவை இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அபாயக ரமான அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியி லும் இதுபோன்ற கட்டிடங்கள் உள்ளதா என்பதை உள் ளாட்சி அமைப்பு அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவ லர்கள் ஆய்வு செய்திட வேண்டும். மேலும், அப்புறப்ப டுத்தாமல் உள்ள உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.