tamilnadu

கரப்சன் கார்ப்ரேசன் சிந்தனையால் விபரீதம் சூயஸ் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி

குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் முன்பின் அனுபவமில்லாத இந்நிறுவனம் குடிநீர் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதன்கார ணமாக கோவை மாநகரப்பகுதியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரா ததால் பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். கோவை மாநகரட்சி பகுதிகளில் குடி நீர் விநியோகிக்கும் உரிமையை கோவை மாநகராட்சி பன்னாட்டு நிறு வனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

மாநகர மக்களின் குடிநீர் விநியோகிக்கும் உரிமையை பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தற்போதுவரை இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் கரப்சன், கார்ப்ரேசன் என்கிற சிந்தனையோடு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத தமிழக அரசும், உள்ளாச்சித் துறையும் இந் நிறுவனத்திடம் தந்தே தீருவோம் என மக்களின் தாகத்தை சூயஸ் நிறுவனத் திடம் அடகு வைத்தது. இந்நிலையில், கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதி களில் தற்போது சூயஸ் நிறுவனமே குடிநீர் விநியோகிக்கும் பணியை செய்து வருகின்றனர். ஆனால் முன் பின் அனுபவம் சிறிதும் இல்லாத இந் நிறுவனத்தின் ஊழியர்கள் எந்தப் பகு திக்கு எவ்வளவு நேரம் குடிநீர் விநி யோகிப்பது. எந்தப் பகுதியில் எவ்வ ளவு குடிநீர் குழாய் இணைப்பு உள் ளது.

பொதுக்குழாயில் எத்தனை குடும்பங்கள் பயனடைகின்றனர், அடுக்குமாடி குடியிருப்புகள் எவ்வளவு, இந்த குடியிருப்புகளின் குடிநீர் தேவை எவ்வளவு என்பது போன்ற எந்த விபரங்களும் இவர்களிடம் இல்லை.  இதன்காரணமாக கோவை மாநகரத் தின் பல பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் விநியோகம் செய்யப்படும் இடங்களிலும் மக்க ளின் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. ஒரு மணிநேரம் தண்ணீர் விட்டவுடன் வால்வை திருப்பி விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் பொதுமக்களிடம் இருந்து எழுகிறது. குடிநீர் விநியோகம் நீண்ட நாட்களாக இல்லை என்பதால் ஆங்காங்கே பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தி லும் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து உடனடியாக மக்களை சமாதானப் படுத்த இப்பகுதிகளில் லாரிகளின் மூலம் குடிநீர் விநியோகிப்படுகிறது. ஆனால் இந்த பகுதிகளிலும் குடி நீர் விநியோகித்ததாக கணக்கில் கொண்டு குழாய்களில் தண்ணீர் விநியோகிக்காமல் இருந்து விடுகின்றனர்.

இதுகுறித்து கோவை இராமநாதபுரம் சுப்பையத்தேவர் காலணியைச் சேர்ந்த அருணகிரிநாதன் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் வந்து 17 நாட்கள் ஆகிவிட்டது. குடிநீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். தினமும் கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது. கடந்த காலத்தில் வறட்சி காரணமாக குடிநீர் விநியோகிப்பது ஓரிருநாட்கள் தாமதமாகும். இதனை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் இப்போதே கேரளாவில் நல்ல மழை பெய்கிறது. அணையும் நிரம்பி வருவதாக செய்திகளும் வருகிறது. அப்படி இருந்தும் ஏன் இந்த குளறுபடி எனத் தெரியவில்லை. மாநகராட்சி அதிகாரிகளை கேட்டால் சூயஸ் கம்பெனிக்காரன் வருவான் அவனிடம் சொல்லுங்கள் என்கின்றனர்.

இங்கே மட்டுமல்ல திருவள்ளுவர் காலனி, ஆர்.கே.வி.நகர், பாலஜிகார்டன் உள்ளிட்ட எந்த பகுதியிலும் முழுவதுமாக தண் ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது என்றார். இதுகுறித்து குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் வழங்கக்கூடாது என தொடர்ந்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி வந்தது. இதனால் கொஞ்சம் தயக்கம்காட்டி வந்த கோவை மாநகராட்சி இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி கோவை மாநகரத்தின் மொத்த குடிநீர் விநியோக உரிமையையும் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது என அரசு தடை விதித்திருந்தது.

ஆனால் இந்த சூயஸ் நிறுவனத்தின் பணிகள் மட்டும் தங்குதடையின்றி கோவை மாநகரத்திற்குள் நடைபெற்று வந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கோ அல்லது கோவை மாநகராட்சியில் உள்ள குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கோ எந்த பகுதியில் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதும், தண்ணீர் கையிருப்பு எவ்வளவு உள்ளது. எத்தனை நாட்களுக்கு இதனை வைத்து சமாளிக்க முடியும் என்கிற அனுபவம் உள்ளது.

ஆனால் இப்படியான எந்த அனுபவமும் இவர்களுக்கு இல்லை. ஆகவே குடிநீர் விநியோகிப்பதில் குளறுபடிகள் நடக்கிறது. மேலும், கோவை மாநகராட்சியின் தேவை போக உபரி நீர் என 60 எம்எல்டி தண்ணீரை (ஒரு எம்எல்டி பத்துலட்சம் லிட்டர்) மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. கோவை மாநகர மக்களுக்கான குடிநீர் விநியோக உரிமையை பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என அரசியல் இயக்கங்களின் போராட்டங்களை புறந்தள்ளியது கோவை மாநகராட்சி.

ஆனால் தற்போது சூயாஸ் நிறுவனத்தால் மாநகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோக குளறுபடிகளுக்கு எதிராக மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட துவங்கிவிட்டனர். அரசியல் இயக்கங்களுக்கு பதில் சொல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் இனி மக்கள் போராட்டங்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்குவார்கள்.

-அ.ர.பாபு