tamilnadu

img

காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இருசக்கர வாகனத்தில் லத்தியை விட்டு விபத்தை ஏற்படுத்திய 


பொள்ளாச்சி, நவ.5- பொள்ளாச்சி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாக னத்தில் வந்தோரை தடுத்து நிறுத்த லத்தியை சக்கரத் தில் விட்டு விபத்தை ஏற் படுத்திய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார். கோவை குனியமுத் தூரை சேர்ந்த நகை கடை தொழிலாளர்களான சர் தார், சன்பர், அப்சல் ஆகிய மூவரும் திங்களன்று பொள்ளாச்சியிலுள்ள ஆழியார் அணையை  சுற்றிப்பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கோட்டூர் தென் சங்கம் பாளையம் அருகே வந்தபோது அங்கு வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பந்தம் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் லத்தியை விட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூவ ருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாலை யெங்கும் ரத்த வெள்ளமானது. இதனையடுத்து அங் கிருந்த பொதுமக்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், காவல் துறையின் இச்செயலால் கடும் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பணியிடை நீக்கம் 

இதற்கிடையே,  விபத்தை ஏற்படுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைய காரணமான கோட்டூர் காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை  பணியிடை நீக்கம் செய்து புதனன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவு பிறப் பித்தார்.