சென்னை, ஆக. 2- வீட்டு வாடகை பிரச்ச னையில் போலீசார் தாக்கிய தால் மனமுடைந்த பெயிண் டர் தீக்குளித்து உயிரிழந் தார். சென்னை புழல் அடுத்து விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் (வயது 40) மனைவி, இரண்டு மகள் களுடன் வசித்து வந்தார். ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வருமானமின்றி இருந்ததால், வீட்டு வாட கைக் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். அதற்கு சீனி வாசன் காலஅவகாசம் கோரி யுள்ளார். அதனை ஏற்காத ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ம் தேதி புகார் கொடுத்தார். இத னையடுத்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சாம் பென்சன் சனிக்கிழமை யன்று (ஆக.1) சீனிவாசன் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் 2 மகள்கள் முன்னி லையில் சீனிவாசனை தாக்கி யுள்ளார். இந்த அவமானத்தை தாங்க முடியாத சீனிவாசன் அன்றிரவு மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீக்காயத்தால் அவதிப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 86 சதவீதம் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று (ஆக.2) பரிதாப மாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர், போலிசார் தன்னை தாக்கிய தால், அவமானம் தாங்காமல் மனமுடைந்து தற் கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இதனை யடுத்து காவல் ஆய்வாளர் சாம்பென்சன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள் ளார். குமரி மாவட்டம் கருங் கல்லில் பணியில் இருந்த போது, வாட்ஸ்ஆப் மூலம் பெண்ணிடம் அநாகரிகமான பேசிய புகாரில் ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் சாம்பென் சன் என்பது குறிப்பிடத் தக்கது.