tamilnadu

img

கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

கள்ளக்குறிச்சி, டிச.9- கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் கடலோர, ரயில்வே மற்றும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக திருவண்ணாமலை சென்ற டிஜிபி சைலேந்திரபாபு செல்லும் வழியில் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை தரம் உயர்த்துவது தொடர்பாகவும், தீயணைப்பு உபகரணங்கள், வாகன வசதி உள்ளிட்டவை தேவை குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும் அலுவலக தீயணைப்பு வீரர்கள் தற்போதைய எண்ணிக்கைக் குறித்தும், தேவையான வீரர்கள் குறித்தும், நவீன உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது,விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி முகுந்தன் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.