tamilnadu

img

சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 கோவை, செப்.28- கோவை சிங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.  கோவை சிங்காநல்லூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சாலை மற்றும் எதிர்புறம் உள்ள ஹவுசிங் யூனிட் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவை மாநகராட்சி நிர் வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்த னர். இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினர் சாலையோரம் உள்ள பகுதிகளை அளந்து, விதிமீறி ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற் றும்படி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவ காசம் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படவில்லை. இந்நிலையில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். முதல் கட்டமாக கோவை சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில், ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.