tamilnadu

img

கூவம் ஆற்றோரம் கட்டப்பட்ட 22 வீடுகள் இடித்து அகற்றம்

திருவேற்காடு, செப். 28- திருவேற்காட்டில் கூவம் ஆற்றோரம் கட்டப்பட்ட 22 வீடுகளை இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடை பெற்றது. திருவேற்காடு நகராட்சிக்  குட்பட்ட கூவம் நதிக்கரை யோரம் ஆக்கிரமித்து கட்டப்  பட்டிருந்த வீடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தது. இதை யடுத்து அந்த பகுதியில் மீத முள்ள 22 வீடுகளை அகற்றும்  பணி பூந்தமல்லி வட்டாட்சி யர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி வரு வாய் துறை அதிகாரிகள் 2  ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றினார்கள்.மேலும் கால அவகாசம் கொடுக்காமல் வீடுகளை அகற்றுவதாகவும் இதனால்  வீட்டில் உள்ள பொருட்களை கூட எடுக்க முடியவில்லை என கூறி அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். வீடுகள் இடிக்கப்பட்ட வர்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் அரசு சார்பில் வீடு கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தையடுத்து அவர்களை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி யில் படிக்கும் மாணவர்கள் புதிதாக செல்லும் இடத்தில் அங்குள்ள பள்ளியில் சேர வும் அரசு உதவிகள் பெறுவ தற்கான அனைத்து வசதி களும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர்  குவிக்கப்  பட்டனர்.