ஒகேனக்கல், ஆக.13- கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், செவ் வாயன்று ஒகேனக்கல்லில் நீர் வரத்து சரிவடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை காரணமாக கபினி, ராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன. இதை யடுத்து அந்த அணைகளில் இருந்து, விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை உபரிநீர் காவிரியில் திறக்கப் பட்டது. இந்த தண்ணீர் பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒனேக் கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஞாயிறன்று 1.25 லட்சம் கன அடி யாக இருந்த நீர்வரத்து படிப்படி யாக அதிகரித்து, திங்களன்று இரவு 3 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளை மூழ்கடித்த வாறு வெள்ளம் சென்றது. அருவிக்கு செல்லும் நடைபாதையும் சீல் வைக்கப்பட்டது. மேலும் மெயின் அருவி அருகேயுள்ள சுமார் 150 அடி உயரமுள்ள தொங்கும் பாலத்தை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இந்நிலையில், கர்நாடக மாநி லத்தில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. இதனால், 3 லட்சம் கன அடிநீர் வரை, காவிரியில் திறந்து விடப் பட்டு வந்தது. தற்போது, மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.கே.ஆர்.எஸ். அணையில் 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கி உள்ளது. இதன்படி திங்களன்று 3 லட்சம் கன அடியாக இருந்த நீர் வரத்து, செவ்வாயன்று காலையில் 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இந்நிலையில் பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் மற்றும் தீய ணைப்பு துறையினர் தீவிர கண் காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.