tamilnadu

காரிப்பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு - வேளாண்துறை இணை இயக்குநர் தகவல்

பொள்ளாச்சி, ஜூன் 14- பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளி லுள்ள விவசாயிகள், காரிப்பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேளாண்துறையினர்  அழைப்பு விடுத் துள்ளனர் . இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்துள்ளதாவது: பொள் ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மத்திய அரசு சார் பில் 2016ஆம் ஆண்டு முதல் பிரதமரின் பயிர் காப்பீடு திட் டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் இரண்டு  பருவங்களாக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இந்தாண்டின் நடப்பு காரிப் பருவத்தில் கோவை மாவட்டம்  பொள்ளாச்சி  மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல்,சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, எள், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நெல் ஏக்கருக்கு ரூ. 621- ம், சோளத்துக்கு ரூ.209, மக்காச்சோளம் ரூ.588, நிலக்கடலை ரூ.578, பருத்திக்கு ரூ.459, வாழைக்கு ரூ. 4 ஆயரத்து 418, மஞ்சளுக்கு ரூ. 3  ஆயி ரத்து 973,  கத்தரிக்காய் ரூ. ஆயிரத்து 95, தக்களி ரூ. ஆயி ரத்து 417  மற்றும் வெங்காயத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 112 என காப்பீடுத் தொகை செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி  புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு இ- சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக ளில் காப்பீடுத் தொகை செலுத்திக்கொள்ளலாம்.  மேலும், பயிர்காப்பீடு விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள, அருகிலுள்ள வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.