tamilnadu

img

சத்தீஸ்கரில் சிபிஎம் வெற்றி

ராஜ்பூர், டிச.25- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட இரண்டு பெண்கள் வெற்றி பெற்றனர். கோர்பா மாநகராட்சியில் பயிரோட்டல் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுருதி குல்தீப்பும், மோங்கோ வார்டில் ராஜ்குமாரி கல்வாரும் வெற்றி பெற்றனர். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் சிபிஎம் பெற்றுள்ள முதலாவது வெற்றியாகும். இந்த வெற்றி காங்கிரஸ்-பாஜக கொள்கைகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என சிபிஎம் மாநிலக்குழு தெரிவித்துள்ளது. 67 உறுப்பினர்கள் கொண்ட கோர்பா மாநகராட்சியில் 31 இடங்களில் பாஜகவும், 26 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. சிபிஎம் வேட்பாளர் சுருதி குல்தீப் பாஜக வேட்பாளரை விட கூடுதலாக 444 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ராஜ்குமாரி கல்வார் காங்கிரஸ் கட்சி வேட்பாளரைவிட கூடுதலாக 299 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.