tamilnadu

img

மாநகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 8- மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு அளித்தனர். ஈரோடு மாநகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் 4 இஞ்ச், 6 இஞ்ச் விட்டமுள்ள பிவிசி குழாய்கள் மூலம் 6 மீட்டர் நீளம் வரை இரு ஆய்வுக்குழிகளும் ஒப் பந்ததாரரால் அமைத்து தரப்படும். இதற்குரிய கட்டணத்தொகையை மாநகராட்சி மூலம் ஒப்பந்ததார ருக்கு வழங்கப்பட்டு, பின் வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டு இணைப்புக்கான வைப்புத் தொகை யையும் சேர்த்து 6 தவணைகளில் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.  ஆனால், மாநகராட்சி அறி விப்பிற்கு மாறாக ரசீது இல்லாமல் ஒப்பந்ததாரர்களால் வீடுகளில் பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சியில் 5 முதல் 10 மடங்கு வரி உயர்த்தப் பட்டுள்ளது. இது குறித்து மண்டல அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வரி உயர்வுகளும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் கொடுக் கும் மனுவை சென்னை தலை மையகத்துக்கு அனுப்புகிறோம் என மனுவை பெற்றுக் கொண்ட னர். இந்நிலையில் அதிக வரிவிதிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக் கடைக்கு தோண்டப்பட்ட சாலை களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவ லரிடம் திங்களன்று மனு அளித் தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, நகர செயலாளர் சுந்தர ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.