tamilnadu

img

மேல மணக்காடு சாலையை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர் ஆக.18- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேலமணக்காடு கிராமத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "மேல மணக்காடு கிராமத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்கு செல்லும் 10 கி.மீ தூரம் உள்ள தார்ச் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் அரசு, தனியார், பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்கின்றன. நூற்றுக் கணக்கான இருசக்கர வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகின்றன.  மேலும் இச்சாலையில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வியாபாரம் செய்வோர், விவசாயிகள், அரசு, தனியார் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தினமும் இந்த சாலையில் பயணிப்பார்கள். தற்போது இந்தச் சாலை சுமார் 2 கி.மீ தூரம் மண் சாலையாகவும் , குண்டும் குழியுமாகவும் மாறி விட்டது. இதில் செல்லும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.