tamilnadu

img

பேராவூரணி கல்லூரி சுற்றுச்சுவரை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 20- கஜா புயலால் சாய்ந்த பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் சுற்றுச்சுவரை மீண்டும் அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடச்சிக்காடு அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி சுற்றுச்சுவர், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் பல இடங்களில் இடிந்து விழுந்தது. இதனா‌ல் தற்போது கல்லூரி வளா கத்திற்குள் ஆடு, மாடுகள், தெரு நாய்கள் புகுந்து விடுகின்றன. மேலும் கல்லூரியைச் சுற்றி புதர்களும் மண்டிக் கிடப்பதால் விசப் பாம்புகள் அடிக்கடி நுழைந்து விடுகிறது. மேலும் வாக னங்களை பாதுகாப்பாக நிறுத்தி செல்ல முடியாத நிலை உள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றி யச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேராவூரணி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி ஆகியோர் கூறு கையில், “ கல்லூரியைச் சுற்றிலும் உட னடியாக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் நகர்ப்புறத்தில் இருந்து, ஒதுக்குப்புறமாக உள்ள கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்ல காலை, மாலை வேளைகளில் பேருந்து வசதி செய்து தரவேண்டும்” என வலி யுறுத்தி உள்ளனர்.