மேட்டுப்பாளையம், மார்ச் 24- கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் டன் கணக் கில் வெள்ளைப்பூண்டு தேக்கமடைந்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் வெள்ளைப் பூண்டுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும். பின்னர் அவை ஏலம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு மொத்த வியாபாரிகளால் கொள் முதல் செய்யப்படும். கடந்த வாரம் சுமார் ஒன்பதாயிரம் மூட்டை வெள்ளைப்பூண்டு வந்திருந்த நிலையில் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள் காரணமாக வியாபாரிகள் வருகை குறைந்து மண்டிகளில் நடைபெறும் வெள்ளைப்பூண்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் வெள் ளைப்பூண்டுகள் தேக்கமடைந்துள்ளது. கடந்த வாரம் ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோ ரூபாய் 200 முதல் 250 வரை விலை போன நிலையில் தற்போது ரூபாய் 60 முதல் 150 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. நீலகிரி மலைப்பூண்டின் வரத்து எப் போதும் போல் உள்ள நிலையில் கொரோனா அச் சுறுத்தல் காரணமாக இதன் விற்பனை சரிந்து பூண்டுகள் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து வருகிறது. இத னால் இவற்றின் விலையும் தொடர்ச்சியாக சரிந்து வருவதால் பூண்டு விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள் ளனர். வரும் வாரங்களில் இதே போன்ற நிலை நீடித் தால் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் வெள் ளைப்பூண்டின் தேக்கம் அதிகரித்து இதன் விலை மேலும் சரியவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப் பில் கூறப்படுகிறது.