கோவை, ஜூலை 1- கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது.
இவரது மகள் குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு சென்று திரும்பியுள்ள னர். இதையடுத்து வீட்டில் உள்ள 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் சட்டமன்ற உறுப்பி னர் அம்மன் அர்ச்சுணனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியா கியுள்ளது. அம்மன் அர்ச்சுணன் உட்பட மீதமுள்ள 6 பேருக்கு கொரோனா நெகட் டிவ் வந்துள்ளது. இதையடுத்து மூவரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.