tamilnadu

கோவை அரசு மருத்துவமனை பிசியோதெரபிசிட்டுக்கு கொரோனா

 கோவை, ஜூன் 7 -  அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோ தெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பிசியோதெரபி வார்டு  ஞாயிறன்று  மூடப் பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் 27 வயது இளைஞர் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந் தார். மருத்துவ விடுப்பில் விழுப்புரத்தில் உள்ள கர்ப் பிணி மனைவியை பார்க்க சென்று விட்டு, கோவை திரும்பியுள்ளார். ஒரு வார காலம் வீட்டில் தனிமைப் படுத்தி இருந்த பின்னர், பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலை யில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிசி யோதெரபி வார்டு மூடப்பட்டது. மேலும், அவரு டன் தொடர்பில் இருந்த 14 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கோவை இஎஸ்ஐ மருத்துவ மனையில் கொரோனா தொற்று காரணமாக பல் வேறு பகுதிகளை சேர்ந்த 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகின்றனர்.