பொள்ளாச்சி, மார்ச். 20- பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவம னையில் கொரோனோ பரவுவதை தடுக்கும் விதமாக ஆயிரம் முககவசங்கள் நோயாளி கள் நலச்சங்கம் சார்பில் விநியோகம் செய் யப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொள்ளாச்சி நோயாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க கும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகு தியாக இலவசமாக ஆயிரம் முகக்கவசங் கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப் பாளர் மருத்துவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள், நோயா ளிகள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் கண்ணன் மற்றும் வெள்ளை நடராஜ், முருகானந்தம், மகாலிங்கம், ஜேம்ஸ்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . மேலும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணகுமார் 2 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கினார். இதேபோல் அனைத்து தன்னார்வலர்களும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க முன்வர வேண்டுமென பொள் ளாச்சி நோயாளிகள் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.