tamilnadu

img

இயற்கை வளங்களை பாதுகாப்போம்

வாலிபர் சங்கத்தின் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

கோவை, செப்.22 இயற்கை வளங்களை பாதுகாப் பதை வாலியறுத்தி வாலிபர் சங்கத் தின் சார்பில் மாவட்ட அளவிலான  கிரிக்கெட் தொடர் போட்டியின் இருதிச்சுற்று ஞாயிறன்று நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கோவை இருகூர் கிளையின் சார் பில் 4 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்று ஞாயிறன்று நடைபெற்றது. 32 அணிகள் மோதிய இப்போட்டியின் முதல் பரிசினை கிணத்துக்கிடவு கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி கைப்பற்றியது. இரண்டாவதாக பிளாக் கேப் அணியும், மூன்றாவ தாக சேலஞ்சர்ஸ் அணியும் வெற்றி பெற்றது. இதன் பரிசளிப்பு விழா இருகூர் மைதானத்தில் நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள் ளிட்டோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பைகள் அளித்து கௌரவித்தார். முன்னதாக, சங்கத்தின்  இருகூர் கிளை செயலாளர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞா னம், கோவை மாவட்ட கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சுரேந்தி ரன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிச் சாமி, வாலிபர் சங்க மாவட்ட தலை வர் ஸ்டாலின்குமார், ஒன்றிய செயலா ளர் பாலு, கிளை தலைவர் பிரேம் குமார், பொருளாளர் கார்த்திக் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற் றனர். இயற்கையை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் பங் கேற்ற அனைத்து வீரர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.