செங்கல்பட்டு, பிப்.21- தமிழ்நாடு மாற்றுத் திறனாளி கள் கிரிக்கெட் அமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி செங்கல் பட்டை அடுத்த பொத்தேரி எஸ். ஆர்.எம். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா பாண்டிச் சேரி ஆகிய மூன்று மாநிலங்க ளைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகி றது. மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவி லான போட்டிக ளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த போட்டிகளில் சிறப்பாக விளை யாடும் வீரர்கள் இந்திய அணிக்கா கவும் தேர்வு செய்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான காஞ்சிபுரத்தை சேர்ந்த சுகனேஷ் பெங்களூரில் உப்பிலி பகுதியில் நடைபெற்ற போட்டி யில் சிறந்த வீரராகத் தேர்வு செய் யப்பட்டுள்ளார். இவர் இங்கி லாந்திற்கு எதிரான மாற்றுத் திற னாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உலக கோப்பையை வென்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்ய உள்ள னர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் நெப்போலியன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கோபி நாத், செயலாளர் சுரேஷ்குமார், துணைச் செயலாளர் தினேஷ் குமார், ஆகியோர் பங்கேற்றுள்ள னர்.