tamilnadu

img

கோவை: போராட்டக்களத்தில் திருமணம் - சிஏஏவிற்கு எதிராக முழங்கிய புதுமண தம்பதி

கோவை, பிப். 20 -  கோவை ஆத்துபாலத்தில் குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து தொடர் போராட்டத் தின் இரண்டாவது நாளான வியாழ னன்று போராட்ட களத்திலேயே திருமண நிகழ்வும் நடைபெற்றது.   குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, நாடு முழு வதும் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்  போராட்டம் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில் இப்போராட் டத்தின் இரண்டாவது நாளான வியாழனன்று போராட்ட களத்தி லேயே அப்துல்கலாம் -ரேஷ்மா ஷெரின் ஆகியோரின் திருமணம் நிகழ்வு நடைபெற்றது. குனியமுத் தூர் பகுதியை சேர்ந்த காய்கறி  வியாபாரியான அப்துல்கலா மிற்கும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ரேஷ்மா ஷெரினுக்கும்  திருமண மண்டபத்தில் திருமணம்  நடைபெறுவதாக இருந்தது.  அதனை மாற்றி போராட்டக்களத் தில் இஸ்லாமிய முறைப்படி திரும ணம் நடைபெற்றது. மேலும், புதுமண தம்பதியினர் சிஏஏவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மக்களின் போராட்ட களத்தில் திருமணம் செய்ய வேண் டும் என்ற ஆசையில் இங்கு திரும ணம் செய்ததாகவும், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங் களை திரும்பப் பெற வேண்டுமென வும் புதுமண தம்பதியினர் வலியு றுத்தினர்.இதில் திருமணத்தின் உறுதியேற்பு முழக்கமாக சிஏஏ விற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதியி னர் உறுதியேற்றனர்.