ஈரோடு, ஜூன் 30- சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் பெருந்துறை 37 ஆவது மகாசபை கூட்டம் பெருந்துறையில் ஞாயி றன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.ரவி மகாசபையைத் துவக்கி வைத்து பேசினார். சங்க துணை செயலாளர் என்.சுந்தர வடிவேல் வரவேற்புரையாற்றினார். சங்க செயலாளர் எஸ்.மயில்சாமி அறிக்கையை முன்வைத்தார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவராக சி.பழனி சாமி, செயலாளராக துரைராஜ், பொருளாளராக பூபதி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப் பட்டது.