திருப்பூர், மே 25 - திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கக்கிளை சார்பில் திருப்பூர் அரசு மருத்துவம னைக்கு 38 யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டது. இடுவம்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பள் ளியில் திங்களன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. வாலிபர் சங்கக் கிளை நிர்வாகி மஞ்சேஸ்வரன் தலைமை வகித்தார். இம்முகாமில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ. மணிகண் டன், ஒன்றியத் தலைவர் பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் உமாசங்கர் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் இம்முகாம் ஏற்பாடு களைச் செய்திருந்தனர். வாலிபர் சங்க ரத்த தான முகாம் நடத்துவதை அறிந்து திமுக, காங்கிரஸ் மற்றும் ஊர்ப் பொது மக்கள் சார்பிலும் அங்கு வந்து மனமுவந்து ரத்த தானம் செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி மற்றும் இடுவம்பாளை யம் பத்மநாபன், தேவ ஏசு உள்ளிட்டோர் முகாமை நடத்திய வாலிபர் சங்கத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் மருத்துவர், பணியாளர்கள் பங் கேற்று ரத்தக் கொடையாளர்களிடம் ரத்தம் சேகரித்துச் சென்றனர்.