சேலம், டிச.6- சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக் கின்றனர். இந்நிலையில் மாணவிகளுக்கு தற்காப்பு குறித்தும், பெண்களுக்கு ஏற் படும் இன்னல்கள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர் நிகழ்வை ரோட்டரி கிளப் சார்பில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த விழிப்புணர்வு பேச்சாளர் ரேகா பத்மநாபன் கலந்து கொண்டு மாணவி களுக்கிடையே உரையாற்றினார். மேலும் சிறுவயது திருமணம், பெண் களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் பாலியல் சீண்டல்களை எப்படி தற்காத்து கொள்ளுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவிகளின் சந்தேகங் களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு மனதை ஒருநிலைப் படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வா கிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.