கோவை, அக். 22- கோவை புலியகுளம் புனித அந்தோணியர் உயர் நிலை பள்ளியில் செவ்வா யன்று “விபத்தில்லா தீபா வளி” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றுது. தேசிய மாணவர் படை அமைப்பின் சார்பில் “விபத் தில்லா தீபாவளி” என்ற விழிப்புணர்வு நிகழ்வு கோவை வடக்கு மண்டல தீ அணைப்பு நிலையத் தார் சார்பில் கோவை புலிய குளம் புனித அந்தோனியார் உயர் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு தமிழ் நாடு பீரங்கி படையின் கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் தலைமை தாங்கினார். இதில் கோவை வடக்கு மண்டல தீ அணைப்பு நிலைய அதிகாரி செல்வமோகன் தலைமையில் பத்து தீ அணைப்பு படை வீரர்களுடன் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டினார்கள். பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்தும், தீ பரவி னால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். விபத்து ஏற்ப்பட்டால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்று வது போன்ற நிகழ்வுகளையும் செய்து காண்பித்தார்கள். இதில் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, புனித தெரேசம்மாள் நடுநிலைப்பள்ளி உள் ளிட்ட 600 மாணவ, மாணவியர், பள்ளி யின் தலைமையாசிரியை மற்றும் இரு பால் ஆசிரியர்களும் கலந்து கொண் டார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவ லர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் ஏற் பாடு செய்திருந்தார்.