உதகை, பிப். 22- பந்தலூரில் காச நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. பந்தலூர் காச நோய் பிரிவு, மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் பந்தலூ ரில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்வு சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவித்ரா தட்டச்சு பயிற்சி மைய நிறுவனர் எபிநேசர் தலைமை தாங்கினார். பந்தலூர் காச நோய் பிரிவு மேற்பார்வையா ளர் ஜீவா காச நோய் குறித்து பேசி னார். அப்போது அவர் பேசுகை யில், காச நோய் எளிதில் தொற் றும் நோயாகும். 3 வாரங்கள் தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில் ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றில் சளி பரிசோதனை செய்து காசநோய் குறித்து அறிந்து கொள்ளலாம். காச நோய் இருப்பின் டாட் முறைப்படி 3 முதல் 6 வார தொடர் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். மேலும், ஊட்ட சத்து உணவுகள் எடுத்து கொள்ள அரசு மூலம் ஊக் கத் தொகை வழங்கப்படும். மருந்து தொடர்ந்து வழங்க தன்னார்வ உதவி செய்வோருக்கு அரசு ஊக் கப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவ சுப்பிரமணியம் பேசும்போது, ஊட்டசத்து குறைபாட்டால் நோய் கள் அதிகம் பரவுகிறது. எனவே, ஊட்ட சத்தான உணவுகளை அதி கம் எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல் வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவாமல் தடுக்க கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சுகா தாரம் காக்க சரியான உணவுகள், உடற்பயிற்சி, யோகா போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை உரு வாக்கும். மக்களிடம் இளையோர் கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மையத் தலைவர் நௌசாத், காச நோய் பரிசோதனை மேற்பார்வை யாளர் ரூபி, பயிற்சி மைய ஆசிரி யர்கள் டெய்சி மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.