தருமபுரி, டிச.13- ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து தரும புரியில் விழிப்புணர்வு பிரச்சாரம் வெள்ளியன்று நடை பெற்றது. போக்குவரத்து துறை ஆணையாளரின் உத்தரவுப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து அதிகாரி களின் தலைமையில் ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி தருமபுரியில் செந்தில் நகரில் வாகன ஓட்டிகளிடம் தலைக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் மணிமாறன், முனுசாமி, பன்னீர்செல்வம், ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.