tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற உணவக உரிமையாளர் மீது வழக்கு

அவிநாசி, செப். 1- அவிநாசி அருகே சட்ட விரோதமாக மது விற் பனை செய்த உணவக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவிநாசி அருகே ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தெக்கலூரில் உணவ கம் (ரெஸ்டாரண்ட்) நடத்தி வருகிறார். இந்த உணவ கத்தில், அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாகப் புகார் வந்தது. இதனை யடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை யில் ஈடுபட்டனர். சோதனையின்போது உணவகத் தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 108 மது பாட்டில்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து உணவக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டியிடம் தங்க நகைப் பறிப்பு

அவிநாசி, அக்.1- அவிநாசி அருகே சின்னக் கானூரில், நூதன முறை யில் ஆறரைப் பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். அவிநாசி அருகே கஸ்பா கானூர் பகுதியைச் சேர்ந் தவர் முருகசாமி மனைவி பூவாத்தாள் (70). இவர் சின் னக்கானூர் அருகே திங்களன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்,  நடந்து வந்த பூவாத்தாளிடம், முகவரியை விசாரித்தனர். மேலும், அவரை வீட்டிற்கு அருகில் விடுவதாகவும், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். இதை நம்பிய பூவாத்தாள் பின் இருக்கையில் ஏறி, அமர்ந்து சென் றுள்ளார்.  சிறிது தூரம் சென்றவுடன்,  வாகனத்தின் முன்புறம் வைத்திருந்த காலி சிலிண்டரை மர்ம நபர் கீழே தள்ளி விட்டு, எடுத்து வைக்க உதவுமாறு பூவாத்தாளிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட பூவாத்தாள் உடனடியாகக் கீழே இறங்கி சிலிண்டரை தூக்கியவுடன் மர்ம நபர், பூவாத்தாள் அணிந்திருந்த ஆறரைப் பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இது குறித்து முருகசாமி அளித்த புகாரின் பேரில், சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி யைத் தேடி வருகின்றனர்.

மகாத்மா காந்தி 150ஆம் ஆண்டு பிறந்தநாள்: திருப்பூரில் இன்று சிறப்பு கருத்தரங்கம்

திருப்பூர், அக். 1 - மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் திருப்பூரில் சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் யூனியன் மில் ரோடு பனிரெண்டார் கல் யாண மண்டபத்தில் புதன்கிழமை மாலை நடைபெறும் இக்கருத்தரங்கில் காந்தி கண்ட ராம ராஜ்ஜியம் என்ற தலைப்பில் பீட்டர் அல்போன்ஸ், கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் கே.சுப்பராயன் எம்.பி., வண்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். முன்னதாக புதன்கிழமை காலை 9 மணிக்கு அவிநாசி சாலை காந்தி நகரில் உள்ள காந்தி அஸ்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்புக் கருத்தரங்கம், காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் திருப்பூரின் அனைத்துப் பகுதி மக்கள் பங்கேற்கும்படி சமூக நல்லிணக்க இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.