tamilnadu

img

அவிநாசி: ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி தீவிரம்

அவிநாசி, அக். 31- அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ் துளை கிணறுகளை மூடும் பணி தீவிரமடைந்துள் ளது. அவிநாசி பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில், 55 ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 14 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால், அவை பயன்படுத் தப்படாமல் உள்ளன. அதில் 3 மழைநீர் சேகரிப் பிற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறி யதாவது, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக் கப்பட்டுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும்  விபரீதம் ஏற்படாத வகையில், பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன. ராயம்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் விவசாய நிலங்களில் பயனற்ற ஆழ் துளை கிணறுகள் உள்ளன. அவற்றிற்கு மேல் மூடியிட்டு, பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என கூறினர்.

ஆட்டோ பிரச்சாரம்

திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 52 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பயன் பாட்டில் உள்ளது. மேலும், தனியார் விவசாய நிலங் கள் மற்றும் வீடுகளையொட்டி உள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் மேல் மூடி யிட்டு, பாதுகாப்பாக வைக்க வேண்டும் என ஆட் டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப் பட்டது. இதற்கிடையில் புதனன்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரி வாணிஸ்ரீ தலைமையில் தத்தனூர் மற்றும் வேலாயுதம்பாளையம் ஊராட்சிகளில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி நடைபெற்றது. இதேபோல், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 31 ஊராட்சிகளில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.