கோவை, ஜூலை 17- இஎஸ்ஐ மருத்துவமனையில் டெண்டர் புதுப்பிக்காத கார ணத்தினால் கடந்த ஒரு மாத மாக லிப்ட்கள் செயல்படாததால், நோயாளிகள் மற்றும் மருத்து வர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சி யத்திற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை சிங்காநல்லூர் வர தராஜபுரத்தில் கடந்த 2016ம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பீட்டில் இஎஸ்ஐ மருத்துவமனை விரிவு படுத்தப்பட்டது. இதில், புற நோயாளிகள், உள்நோயாளிகள், 24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு செயல்படுகிறது. மருத்துவ கல் லூரியுடன் இணைந்த இந்த மருத்துவமனையில் 17 பொது துறைகள், 14 சிறப்பு மருத்துவ துறைகள் என மொத்தம் 31 துறைகள் உள்ளது. இந்த மருத்துவ மனையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 1,200 பேர் புற நோயாளிகளாகவும், 400 பேர் உள்நோயாளிகளாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி நோயாளிகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனையில் 17 லிப்ட்கள் உள்ளது. இதில், மருத்துவமனையின் புறநோயாளி கள் பிரிவு செயல்படும் கட்டிடத் தில் மட்டும் 4 லிப்ட்கள் உள்ளன. இந்த லிப்ட் பராமரிக்கும் பணி தனியார் வசம் உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக இஎஸ்ஐ மருத்துவ மனையில் 4 லிப்ட்கள் பழு தடைந்துள்ளது. இதனால் நோயா ளிகள் மற்றும் மருத்துவர்கள், பார்வையாளர்கள் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் கூறுகையில், அன் றாடம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தார் இம்மருத் துவமனைக்கு வந்து செல்கின்ற னர். ஆனால் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல்வேறு வகையில் நோயாளிகள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இங்குள்ள ஐந்துக்கும் மேற்பட்ட லிப்ட்டு கள் வேலை செய்யவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், லிப்ட் பராமரிப்பதற்கான டெண் டர் புதுப்பிக்கவில்லை என்கிற காரணம் சொல்லப்படுகிறது. இதனை சரிசெய்ய மருத்துவ மனை நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக கடந்த ஒரு மாதமாக நோயாளிகள், அவர்க ளின் உறவினர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் கூட படிக்கட்டு களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலா ளர்களின் ஒருபகுதி பங்களிப் போடு இயங்கும் இஎஸ்ஐ மருத் துவமனையில் நடைபெறும் இது போன்ற நிர்வாகத்தின் அலட்சி யம், மருத்துவமனையை நம்பி வருபவர்களுக்கு பெரும் அவ தியை ஏற்படுத்தி வருகிறது. இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வா கத்தின் அலட்சியத்தை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே, உடனடியாக நிர்வாகம் தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்றார். இதுகுறித்து மருத்துவமனை யின் உள்ளிருப்பு மருத்துவ அலு வலர் (ஆர்எம்ஓ) கூறுகையில், “லிப்ட் பராமரிப்பு பணியில் சிக் கல் இருந்தது. நோயாளிகள், மருத் துவர்களின் கோரிக்கையை ஏற்று லிப்ட் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. தற்போது இரண்டு லிப்ட்டுகளை சரி செய்துவிட் டோம். மற்றவையும் சரிசெய்ய முயன்று வருகிறோம். இது போன்ற சிக்கல் மீண்டும் வராமல் இருக்க தேவையான நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.