திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் நோய் தொற்று ஏற்பட்டஇடம் (மூலம்) தெரியாத நோயாளிகள் 2 சதவிகிதத்துக்கும் குறைவு எனவும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இது 40 சதவிகிதம் எனவும் கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறினார்.திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: கோவிட்நோய் தொற்றின் மூலத்தை 98 சதவிகிதம் கண்டறிந்துள்ளோம். மூலத்தை கண்டறிய முடியாத நோய்தொற்று பகுதிகளை தொகுக்கவும், சமூக பரவலுக்குவாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறியவும் முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை கட்டுப்பாட்டு மண்டலங்களாக பிரிக்கப்படும். கிளஸ்ட்டர்களாக அவற்றை பிரித்ததன் மூலம் சமூகப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க முடிந்தது என்று முதல்வர் கூறினார்.
நோய் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்படும் பிரச்சனை குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உலகளவில் 60 சதவிகிதம் பேர் எந்த அறிகுறிகளும் இல்லாமலே கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்கள். 20 சதவிகிதம் நோயாளிகளிடம் மிதமான அறிகுறிகளேகாணப்படுகின்றன. மீதமுள்ள 20 சதவிகிதம் பேரிடம் கடுமையான அறிகுறிகள் காணப்படுகிறது.அவர்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்கள் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஜுன் 15 முதல் 22 வரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேரும் வெளியில் இருந்துவந்தவர்கள். மே 4 க்கு பிறகு கேரளத்தில் 2811 பேரிடம் கோவிட் கண்டறியப்பட்டது. இதில் 2545 பேரும்வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவா்கள் என்பதை முதல்வர் தெளிவுபடுத்தினார்.
26 லட்சம் மாணவர்களுக்குஉணவுப் பொருள் பைகள்
முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் கூறுகையில், மதிய உணவு திட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்க நிலைக்குமுந்திய வகுப்பான ப்ரீ-பிரைமரி முதல் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்படும். அரிசியுடன் மஞ்சள், பயறு, சர்க்கரை, மசால் தூள்கள்,அடை, உப்பு என 9 வகையான உணவுப் பொருட்கள்பைகளில் வழங்கப்படும். இத்திட்டத்தால் அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 26 லட்சத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.81.37 கோடி வழங்கப்பட்டது. இந்த உணவுப் பொருள் பைகள் ஜூலை முதல் வாரத்திற்குள் வழங்கப்படும்.
ஆன்லைன் கற்றலுக்குத் தேவையான தொழில்நுட்ப திறன்கள் இல்லாத குழந்தைகளுக்கான மாணவர் போலீஸ் கேடட் திட்டத்தின் கீழ்அனைத்து மாவட்டங்களிலும் 1311 தொலைக்காட்சிகள் மற்றும் 123 ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன. 48 மடிக்கணினிகள் மற்றும் 146 கேபிள்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கண்ணூரில் 176 தொலைக்காட்சிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 48 ஸ்மார்ட்போன்கள் கொச்சியில் வழங்கப் பட்டுள்ளன. இவை நன்கொடையாளர்கள் மற்றும்பிற ஆர்வமுள்ள நபர்களின் உதவியுடன் வாங்கப்பட்டதாக முதல்வர் கூறினார்.