திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச தரத்தில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நோயாளிகள் சேவைப்பிரிவை கேரள முதல்வர் பினராயிவிஜயன் தொடங்கி வைத்தார்.காணொலி காட்சி மூலம் நடந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியை வலுப்படுத்த அரசுஉறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். அரசாங்கம் பல புதுமையானதிட்டங்களைத் தொடங்கியுள்ளது. சிறப்பு சிகிச்சைக்கான புதிய அமைப்புகளாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ளஅனைத்து மருத்துவ வசதிகளையும் மாற்றுவதன் மூலம்நவீன வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் கூறினார். மருத்துவமனைக்கு வந்த தருணத்திலிருந்து நோயாளிகள் சர்வதேச தரத்திலான சேவைகளைப் பெற முடியும் என்று முதல்வர் கூறினார்.விழாவிற்கு தலைமை தாங்கிய சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா பேசுகையில், மருத்துவக் கல்லூரிக்கு 500 க்கும் மேற்பட்ட பதவிகளை அரசுஉருவாக்கியுள்ளது என்றார். அமைzசர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசுகையில், கோவிட் உருவாக்கிய தடைகள் இருந்தபோதிலும், ரூ .717 கோடிக்கான மாஸ்டர் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகதெரிவித்தார்.மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர். ஏ. ராம்லா பீவி அறிக்கையை சமர்ப்பித்தார். மேயர் கே.ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பிரசாந்த், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.கே.மது, மாவட்ட ஆட்சியர் டாக்டர். நவ்ஜோத் கோசா, நோர்கா ரூட்ஸ்துணைத் தலைவர் கே.வரதராஜன் உள்ளிட்டோர் பேசினர்.