மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் 3000 பேர் மனு அளிப்பு
திருப்பூர், நவ. 26 - திருப்பூரில் சொந்தமாக விலைக்கு வாங்கி பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் வீடுகளை கோயில் இடம் எனச் சொல்லி காலி செய்ய முயல்வதை கைவிட்டு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் பங்கேற்று சுமார் 3000 மனுக்கள் அளிக்கப்பட்டன. தமிழக அரசு அரசாணை எண் 318ன் படி அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந் தாண்டுகளுக்கு மேலாக குடியிருப் போருக்கு பட்டா வழங்கவும், திருப்பூ ரில் நல்லூர், ராக்கியாபாளையம், ராய புரம், கருவம்பாளையம் கேவிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகு திகளில் பணம் கொடுத்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டி இரண்டு, மூன்று தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது எனச் சொல்லி அதை கையகப்படுத்தவும், அப்புறப்படுத்தவும் அரசு நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இதைக் கைவிட்டு, அந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஐநூறுக்கும் மேற் பட்ட மக்கள் திரண்டனர். இந்த இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல் தொடங்கி வைத் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள்கே.உண்ணிகிருஷ்ணன், கே.ரங்கராஜ், வடக்கு மாநகரச் செய லாளர் பி.முருகேசன், வடக்கு ஒன்றி யச் செயலாளர் கே.பழனிச்சாமி, வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம், என்.சுப் பிரமணியம், ஆர்.ஈஸ்வரன், ஆர். மைதிலி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.மொத்தம்1222 மனுக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் அளிக்கப் பட்டன.
உடுமலை
இதேபோல், இலவச வீட்டுமனை, மனைப்பட்டா கோரி உடுமலை வட் டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்க லம் ஒன்றிய செயலாளர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கி.கனகராஜ், பஞ்ச லிங்கம், வெ.ரங்கநாதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலை நகரம், ஒன்றி யம், குடிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.
அவிநாசி
அவிநாசி வட்டாட்சியர் அலுவ லகத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் இலவச வீட்டுமனை பட்டா கோரி 430 மனுக் கள் வட்டாட்சியர் சாந்தியிடம் அளிக் கப்பட்டன. ஒன்றிய செயலாளர் எஸ். வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.பழனிசாமி, பி.சுப்பிரமணி, ஆர்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமை யில் சோமனூத்து, ராம்நகர், காமரா ஜபுரம், நாடார்தெரு, சோளக்கடை வீதி, காளிபாளையம், கரையூர், மருதக வுண்டன்வலசு, மூலனூர், பனங்காட் டுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், தொட்டியந்துறை, பேட்டைகாளி பாளையம், செட்டியார் தோட்டம், அம்பேத்கர்நகர், ரெட்டாலவலசு பகுதி களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சி யர் ரவிச்சந்திரனிடம் 600 மனுக் களை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், தாலு காச் செயலாளர் என்.கனகராஜ் மற் றும் நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, மேகவர்ணன், சுப்பிர மணி, முத்துச்சாமி, கிருஷ்ணமுர்த்தி, மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
காங்கேயத்தில் வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் எஸ்.திருவேங்கடசாமி தலை மையில் காங்கேயம் லட்சுமிபுரம், பங்களாபுதூர் களிமேடு மற்றும் வெள் ளகோவில் சிவநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சுமார் 432 பேர் மக்கள் மனு அளித்தனர். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.குமாரசாமி, ராதாகிருஷ்ணன், செல்லமுத்து மற் றும் கட்சி அணியினர் பங்கேற்றனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பி னர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செய லாளர் கே.எ.சிவசாமி, தாலுகா குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணி யன், செயலாளர் க.பிரகாஷ் ஆகி யோர் பங்கேற்றுப் பேசினர். இதன் தொடர்ச்சியாக வட்டாட்சியர் கார்த்தி கேயனிடம் வீட்டுமனைப் பட்டா கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.
பல்லடம்
இதேபோல், பல்லடம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டக்குழு உறுப் பினர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில் சுமார் 500 மனுக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி பல்லடம் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டன.