திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கூட்டுச் சாலையில் இரவு பணி முடிந்து வீடு டிச.25 அன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பெண் பவானி, ஆட்டோ ஓட்டுநரின் அத்துமீறலால் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டதால் அவரது அலறல் சத்தம் கேட்டுசாலையோரம் நின்றிருந்த இளைஞர்கள் ஏகேஸ், எஸ்தர்,பிரேம்குமார், வினீத், துரைராஜ், பிரிஸ்டன் பிராங்களின் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை துரத்தி சென்றுபோது ஏற்பட்ட விபத்தில் ஏகேஸ் மரணமடைந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்திலிருந்து பெண்ணை காப்பாற்றிய வீரத்தையும், சமூகபொறுப்புணர்வையும், தவறை தட்டிக்கேட்டு துணிச்சலுடன் செயல்பட்டதையும் மனதார பாராட்டுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், ரூ.25 ஆயிரம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியான ஆயிஷாபானு, கன்சால் மகரிபா, இர்பான் ஆஷியா ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.