tamilnadu

கோவையில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று

கோவை, ஜூலை 28 -  கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக ஒவ்வொரு  நாளும் 200க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகின்ற னர். இதன் உச்சமாக திங்களன்று 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாயன்று 256 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் கணபதி, குனியமுத்தூர், செல்வபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர். இதில் எட்டு குழந்தைகளும் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.