திருப்பூர், மே 31–நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஆளும் அரசு நிர்வாகம் வழக்கமான தனது மக்கள் விரோத அராஜக செயலை அரங்கேற்றத் தொடங்கி விட்டது.ஏற்கெனவே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகடாஸ்மாக் கடை திறப்பதற்குமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டுமே மாதம் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் பலத்த மழை பெய்து, டாஸ்மாக் மதுபானக் கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அருகாமையில் இருக்கும் கலைவாணி தியேட்டர் பகுதி, நேதாஜி நகர், கவிதாலட்சுமி நகர், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இந்நிலையில் அதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு அரசு நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. தமிழகத்தை உலுக்கிய மிகப்பெரும் கோரவிபத்தில் 23 பேர் இறந்த சம்பவத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு மீண்டும் அதே பகுதியில்டாஸ்மாக் கடை திறக்க முயற்சிப்பதை எதிர்த்து மக்கள் ஆவேசம் அடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியில் அனைத்துக் கட்சிகளை அணிசேர்த்து 200க்கும் மேற்பட்ட பொது மக்களைத் திரட்டி டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அத்துடன் அந்த இடத்தில் இனி டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் உறுதியளித்தனர்.ஆனால் அரசு நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை மீறி வியாழக்கிழமை அதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சந்தை, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், நெருக்கமான மக்கள் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் மீண்டும் கடை திறக்க முயற்சிப்பதைஅறிந்து அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்தனர்.அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரைச் சந்தித்து இந்த கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி கடை திறக்கப்படுமானால் வலுவான போராட்டம் நடத்த அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.