tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லாத மாற்று இடம் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மக்கள் எதிர்ப்பு

கோவை, மே 31 -  நீர்நிலை ஆக்கிரமிப்பிலிருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் அடிப்படை வசதிகள் இல் லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோவை முத்தன்ணன் குளம் அருகே குமாரசாமி காலனி உள்ளது. இக்காலனியானது நீர்நிலை ஆக்கிர மிப்பில் இருப்பதாக கூறி, இப்பகுதி மக்களை அப்புறப்படுத்த மாநக ராட்சி நிர்வாகமும், குடிசை மாற்று வாரியமும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சிலருக்கு குடிசை மாற்று வாரி யம் சார்பில், மாற்று இடம் வழங்கப் பட்டது. இதனையடுத்து அங்கு குடி யேறியவர்களில் சிலர் போதிய அடிப் படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனக்கூறி மீண்டும் குமார சாமி காலனி பகுதிக்கே வந்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், மாற்று இடம் வழங் கப்பட்டும் மீண்டும் அப்பகுதியில் குடி யேறியவர்களின் மின் இணைப்பை துண்டித்து அப்புறப்படுத்தும் முயற்சி களை மேற்கொண்டது. இதனை கண்டிக்கும் விதமாக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு களில் கருப்பு கொடி ஏற்றி  தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.